மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடிப்பழக்கத்திற்கு அடிமையான அண்ணன், தம்பி... ஒரே இரவில் சிதைந்த குடும்பம்.!
திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் குணசேகரன் மற்றும் ராஜேந்திரன். அண்ணன், தம்பியான இருவரும் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆக வில்லை.
மேலும் அண்ணன், தம்பி இருவரும் சேர்ந்து தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டவர்கள். வழக்கம் போல் நேற்று மாலையும் இருவரும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது தம்பி ராஜேந்திரன் அண்ணனை தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அதனை அடுத்து சிறிது நேரம் கழித்து மீண்டும் வீட்டிற்கு வந்த ராஜேந்திரனை குணசேகரன் திட்டியதால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் அண்ணன் என்று கூட பாராமல் வீட்டில் இருந்த குழவி கல்லால் அண்ணனை தாக்கியுள்ளார். அதில் குணசேகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.