மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: கால்நடைத்தீவன ஊழலில் பீகார் முன்னாள் முதல்வருக்கு 5 வருட சிறை - சி.பி.ஐ நீதிமன்றம்.!
ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவராக பொறுப்பில் இருப்பவர் லாலு பிரசாத் யாதவ். இவர் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஆவார். அம்மாநிலத்தில் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ், கால்நடைத்தீவன ஊழல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து, ஜாமின் பெற்று வீட்டிற்கு வந்த நிலையில், அவரது மகன்கள் இடையே கட்சியை யார் வழிநடத்துவது என்ற பிரச்சனை இருந்தது. இதனால் மற்றொரு கட்சியும் புதிதாக உருவாகியது. ஊழல் செய்து வீட்டிற்கு வந்த தந்தையிடம் முதல் ஆளாக மகன் பிரச்சனை செய்த சம்பவமும் நடந்தது.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் உள்ள ராஞ்சி சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஐந்தாவது கால்நடைத்தீவன ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவுக்கு 5 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.60 இலட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.