மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆதார் கார்டையும், பான் கார்டையும் இணைக்க கடைசி நாள்! இறுதி வாய்ப்பை தவற விடாதீர்கள்!
ஆதார் கார்டையும், பான் கார்டையும் இணைக்குமாறு வருமான வரித்துறை அறிவுறுத்தியது. இந்த காலக்கெடு அடிக்கடி நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், ஒருவர் ஆதார் கார்டையும், பான் கார்டையும் 2020 மார்ச் 31-க்குள் இணைக்காமல் விட்டுவிட்டால், அவரின் பான் எண்ணை வருமான வரித்துறை செயலிழக்கச் செய்துவிடும் என தெரிவிக்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் மாதம், ஆதார் திட்டம் சட்டரீதியாக செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் என்று உத்தரவிட்டது.
கடந்த மாதம் வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பில், பான் எண்ணுடன் ஆதார் இணைக்க மார்ச் 31-ந் தேதி கடைசிநாள் என்றும், அப்படி இணைக்காவிட்டால், பான் எண் செயலிழந்து விடும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், வருமான வரித்துறை நேற்று மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில், மார்ச் 31-ந் தேதிக்குள், பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம். பயோ மெட்ரிக் ஆதார் உறுதிப்படுத்தல் மூலமும், பான் சேவை மையங்களிலும் இப்பணியை செய்யலாம். இந்த இறுதி வாய்ப்பை தவற விடாதீர்கள் என தெரிவித்துள்ளது.