நீங்க இந்த மாவட்டம்மா?? இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்க போகுது!! வானிலை ஆய்வு மையம் தகவல்..



Latest rain updates news for Tamil Nadu

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

rain

அதேபோல், மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல், சேலம் ஆகிய பகுதிகளில் நாளை கனமழை பெய்யக்கூடும் எனவும், 4,5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.