சட்டக்கல்லூரி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை: கணவருக்கு செக் வைத்த ஆர்.டி.ஓ..!



Law college student commits suicide by hanging

சென்னை, அமைந்தகரை பகுதியில் உள்ள பி.பி.தோட்டத்தை சேர்ந்தவர் கலைவேந்தன்.  இவர் சாஃப்ட்வேர் எஞ்சினியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரியதர்ஷினி. இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இவர்களுக்கு 3 வருடத்திற்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.

திருமணத்திற்கு பின்னரும் பிரியதர்ஷினி மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார்  சட்டக்கல்லூரியில் வழக்கறிஞருக்கான பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், பிரியதர்ஷினி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர் கலைவேந்தன், இது குறித்து அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறயினர், பிரியதர்ஷினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில்,   பிரியதர்ஷினி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக கணவனுக்கும் மனைவிக்கும் இடையே தகராறு நடந்தது தெரிய வந்திருக்கிறது. திருமணம் நடந்து 3 ஆண்டுகளே ஆன நிலையில் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது.