மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யாரும் வீட்டிலிருந்து வெளியே வராதீங்க.! தனியார் பள்ளிக்கு விடுமுறை.! நடுங்கி கிடக்கும் மயிலாடுதுறை.!
மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்று இரவு சிறுத்தை ஒன்று நடமாடுவதை அந்த வழியாக சென்ற சிலர் கண்டுள்ளனர். இந்த நிலையில் பயந்துபோன அவர்கள் இதுகுறித்து உடனே காவல்துறைக்கும், வனத்துறையினருக்கும் தகவலளித்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் சிறுத்தை நடமாடுவதாக கூறிய பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
அப்பொழுது அதில் தெருநாய்கள் சில சிறுத்தையை விரட்டி சென்ற காட்சி பதிவாகியிருந்தது. மேலும் அப்பகுதியில் சாலை ஓரத்தில் சிறுத்தையின் கால்தடம் இருந்துள்ளது. இந்த நிலையில் அங்கு சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதை உறுதி செய்த வனத்துறையினர், பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி, வெளியே வராமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவேண்டும். மேலும் எவரேனும் சிறுத்தையை கண்டால் 93608 89724 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க கூறி அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தவிர்க்க அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவித்துள்ளார். மேலும் சிசிடிவி கேமராவின் மூலம் சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு, விரைவில் பிடிக்கப்படும். மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும் கூறியுள்ளார். இந்த நிகழ்வால் பொதுமக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.