மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஐயோ இது 'ஆ' தான்., ஆசிரியைக்கே 'ஆ' போட கற்றுத்தந்த சிறுவன்..!!
சமூகவலைத்தளம் என்று பிரபலம் ஆனதோ, அன்று முதல் அனைவரிடத்தும் செல்போன் வந்து எப்பொழுதும் எதாவது பார்த்துக்கொண்டும், பதிவிட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். இந்த நிலையில் வெள்ளித்திரை பிரபலம், சின்னத்திரை பிரபலம் என்றில்லாமல், டிக் டாக் பிரபலம், இன்ஸ்டா பிரபலம், யூடூப் பிரபல, பேஸ்புக் பிரபலம் என்று பல பிரபலங்கள் வர தொடங்கிவிட்டார்கள்.
மேலும், குழந்தைகள் நடனம் ஆடுவது, பாட்டுப்படுவது, விளையாடுவது போன்று பல வீடியோக்கள் வைரலாகி வரும். அந்த வகையில் தற்போது சிறுவன் ஒருவன் பள்ளியில் ஆசிரியருக்கே ஆ போட கற்றுக்கொடுத்த வீடியோ வைரல். இந்த வீடியோவில் ஆசிரியர் சிறுவனுக்கு 'ஆ' போட கற்று தந்துள்ளார். ஆனால் சிறுவனுக்கு சரியாக ஆ போட வரவில்லை. இதனை சாமர்த்தியாமாக சமாளிக்கும் அச்சிறுவன் தான் போட்ட ஆ தான் சரி என்பது போல் பேசியுள்ளார்.
அதில், இது தான் 'ஆ'. நான் போட்டதுதான் 'ஆ' என்று ஆசிரியரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அந்த ஆசிரியர் எவ்வளவு கூறியும் நான் போட்டது தா 'ஆ' என்று கூறி சாதித்துள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் நமக்கே மனம் முழுவதும் சந்தோசம் நிறைந்து விடுகிறது.