மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிர்ச்சி சம்பவம்... பள்ளியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தாயார்.?
பள்ளி நிர்வாகம் கட்டிய தொகையை திருப்பித் தர மறுத்ததால் மாணவியின் தாயார் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் வசந்தகுமாரி(26) இவர் தனது மகளை எல்கேஜியில் சேர்ப்பதற்காக செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 13 ஆயிரம் ரூபாய் செலுத்தி இருக்கிறார்.
இந்நிலையில் பள்ளி நிர்வாகம் மீதி தொகையையும் உடனடியாக செலுத்தும் படி அவரை நிர்பந்தித்திருக்கிறது. தன்னால் மீதி தொகையை இப்போது செலுத்த முடியாது எனக் கூறிய வசந்தகுமாரி தான் செலுத்திய பணத்தை திரும்ப கேட்டுள்ளார் இதற்கு பள்ளி நிர்வாகம் மறுத்து இருக்கிறது.
இந்தப் பிரச்சினையால் மனமுடைந்த அவர் பள்ளி வளாகத்திலேயே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் அவரது உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இளம்பெண் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.