தமிழகத்தில் மீண்டும் பொதுமுடக்கம்.! தமிழக அரசு அதிரடி உத்தரவு.!



lockdown extended in tamilnadu

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

தமிழகத்தில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பொதுமுடக்கம் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், தற்போது இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. 

இந்தநிலையில், பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக் பொது மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த மார்ச் மாதம் போன்று மீண்டும் பொது முடக்கம் அமலுக்கு வருமா, தமிழகத்தில் வழக்கம் போல் தளர்வுகள் அளிக்கப்படுமா என்ற கேள்விகள் பொதுமக்களிடையே எழுந்தன. இந்தநிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் ஜனவரி 31-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

corona

தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் புதிய தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. நேரக் கட்டுப்பாடுகளை தளர்த்தி, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், வழக்கமான நேர நடைமுறைகளை பின்பற்றியும், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது.

ஆங்கில புத்தாண்டு மற்றும் காணும் பொங்கல் அன்று கடற்கரைகளில் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா தொற்று ஏற்படுவதை முன்னெச்சரிக்கையாக தடுக்கும் வகையில், மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டு மற்றும் காணும் பொங்கல் அன்று மட்டும் (16.1.2021) பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், கொரோனாவை முழுமையாக தடுக்கவும், நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். குறிப்பாக, நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.