மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு.. அரசு வழங்கிய கூடுதல் தளர்வுகள் என்னென்ன?? முழு விவரம் இதோ..
கூடுதல் தளர்வுகளுடன் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மேலும் நீட்டிக்கபடுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா இன்றுவரை ஓய்ந்தபாடில்லை. கொரோனாவில் இருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் பல்வேறு ஊரடங்கு நடைமுறைகளை கடைபிடித்துவருகிறது. இந்தியாவிலும் ஊரடங்கு நடைமுறை பல்வேறு தளர்வுகளுடன் தற்போதுவரை நடைமுறையில் உள்ளது.
தமிழகத்திலும் ஊரடங்கு நடைமுறை தொடர்ந்துவரும் நிலையில், தற்போது கூடுதல் தளர்வுகளுடன் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு 2-3-2022 வரை நீட்டிக்கபடுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி,
1 . நர்சரி, மழலையர் விளையாட்டுபள்ளிகளைத்திறக்க அனுமதி
2 . தமிழகத்தில் பொருட்காட்சிகளுக்கு அனுமதி
3 . திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சமாக 200 பேர் வரை பங்கேற்க அனுமதி
4 . இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 100 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கலாம்.
5 . சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டம் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும்.
6 . வரும் 16-ம் தேதி முதல் திரையரங்குகள், உணவகங்கள் ஆகியவை 100 சதவீத இருக்கைகளுடன் இயங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7. உடற்பயிற்சிக் கூடங்கள், அழகு நிலையங்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.