இன்று முதல் ஆரம்பமாகிறது அத்திவரதரின் புதிய தரிசனம்!! காஞ்சிபுரத்தில் குவியும் பக்தர்கூட்டம்!!



lord athivarathar standing from today

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர்  40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தருகிறார். அந்த வகையில் தற்போது இந்த ஆண்டு மிகவும் கோலாகலமாக தரிசனம் நடைபெற்று வருகிறது.

மேலும் கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதியில் இருந்து அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அவரை தரிசனம் செய்ய இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடிவருகின்றனர். இந்நிலையில் காஞ்சீபுரத்தில் அத்திவரதர் தரிசனத்துக்கு, ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

athivarathar

மேலும் தரிசனத்துக்கு 2 நாட்களுக்கு முன்பே, முன்பதிவு செய்து காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரையிலும் தரிசனம் செய்யலாம் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அத்திவரதர், படுத்தவாறு சயன கோலத்தில் காட்சியளித்தது நேற்றுடன் முடிவடைந்துள்ளது. அதற்கு தொடர்ந்து வரும் ஆகஸ்டு  1ம் தேதியான இன்று முதல் 17 ம் தேதி வரை நின்ற கோலத்தில் அத்திவரதர் தரிசனம் தரஉள்ளார். இந்நிலையில் அத்திவரதரை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிவர் என எதிர்பார்க்கபடுகிறது. இதனை தொடர்ந்து 18ம் தேதி அதிகாலை அத்திவரதர் சிலை மீண்டும் குளத்தில் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.