மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காவல் தெய்வம் சுடலைமாடனுக்கு பெயர் வந்தது எப்படி? ஆன்மீக நண்பர்களே தெரிஞ்சிக்கோங்க.!
கிராமத்து காவல் தெய்வங்களில் தென்மாவட்டங்களில் முதன்மை பெற்றவர் சுடலை மாடன். இவரை மாயாண்டி, மதன் தம்புரான் உட்பட பல புனைப்பெயர்களுடன் மக்கள் இன்றளவும் பயபக்தியுடன் வணங்கி வருகின்றனர். சிவன் - பார்வதி ஆகியோரின் மகனான சுடலைமாடன், கைலாயத்தில் ஆயிரம் தூண்டல் கொண்ட மண்டபத்தில் உள்ள தூண் விளக்கு சுடரில் பிறந்து மாடன் எனவும், மயானத்தில் எரிந்துகொண்டு இருந்த பிணத்தை உண்டு சுடலை மாடன் ஆகினார் என்பது சான்றோர் சொல்.
சுடலைமாடன் வரலாறு
காப்பது, படியளப்பது ஆகியவற்றால் கருணையுள்ளதோடு செயல்படும் சிவபெருமான் - பார்வதி தம்பதிக்கு முருகன், விநாயகர் என இரண்டு மகன்கள் இருந்தாலும், அவர்கள் கடைமையை கண்ணென கருதி கைலாயத்தில் இருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர். இதனால் பார்வதி தேவிக்கு பிள்ளை வேண்டும் என்ற வருத்தம் எழுந்து, சிவனிடம் ஆண் பிள்ளைக்கான வரத்தை வேண்டுகிறார்.
சிவனோ கைலாயத்தில் இருக்கும் 32ம் தூணில் எரியும் மணிவிளக்கின் கீழ் முந்தானையை ஏந்தி நின்றாள் குழந்தை பிறக்கும் என்க, பார்வதியும் அங்கு குழந்தைக்காக காத்திருந்தார். அப்போது சிவன் விளக்கின் சுடரை தூண்டிவிட்டு முந்தானையில் விழுந்த சுடர் தெறித்து முண்டமாக கிடைக்க, அதனை வைத்து உருவத்தை உண்டாக்கிய சிவன் மாடன் என பெயர்சூட்டினார். மாடன் என்பதற்கு சுடர் என்பது பொருள்.
பின் சிவன் - பார்வதி மகனை பாசத்தோடு வளர்க்க, ஒருநாள் குழந்தை பசி என அழுது வெளியே சென்று சுடுகாட்டில் இருக்கும் பிணங்களை சாப்பிட்டுவிட்டு பார்வதியின் உறக்கம் கலைவதற்குள் வந்து உறங்கிக்கொண்டது. ஆனால், பார்வதி உறக்கத்தில் இருந்து எழுந்து குழந்தை ஆரத்தழுவியபோது பிணநாற்றம் அடித்துள்ளது. இதனை கவனித்த பார்வதி சிவனிடம் விஷயத்தை கூற, சிவன் கைலாயத்தில் மாமிசம் சாப்பிடுபவர்கள் வேண்டாம் எனக் கூறி போலாம் அனுப்பி வைக்கிறார். சிவனின் அருள் பெற்ற மாடன், அடங்காத பேய்களையும் அடக்கும் வல்லமை வேண்டும் என்கிறார்.
அதேபோல, நல்லவர்கள் என்னை நினைத்து மயானத்தில் இருக்கும் சாம்பலை நெற்றியில் இட்டால் நோய்கள் ஓட வேண்டும். கெட்டவர்கள் எனக்கு பணிந்து சென்றாலும் அவர்களை கருவறுக்கும் வரம் வேண்டும் என கேட்கிறார். சிவனும் மகனுக்கு வரத்தை அருள, பூமிக்கு வந்து சுடுகாடுகளை கட்டியாலும் காக்கும் கடவுளாக சுடலை மாடன் விளங்கி வந்தார். இதனாலேயே அவருக்கு சுடலை மாடன் என்ற பெயர் வந்தாயிற்று.
மாடன் எப்போதும் தனது அன்னையான சக்தி, ஆதரவு தந்து வளர்த்த பகவதி, பேச்சியம்மன் ஆகியோருடன் பெரும்பாலும் காட்சி தருவார்.
சுடலை மாடனின் வரலாற்றை வில்லுப்பாட்டு வடிவில் கேட்டு மகிழ