ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
19 வயது மாணவியின் தற்கொலை... காவல்துறை விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் சம்பவம்!
நீலகிரி மாவட்டத்தில் காதலன் கர்ப்பம் ஆகிவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் பாலிடெக்னிக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக லாரி டிரைவர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கூட்டணி பகுதியைச் சார்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். விடுமுறைக்காக ஊருக்கு வந்த அவர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது குடும்பத்தினர் உடலை அடக்கம் செய்தனர்.
இந்நிலையில் இறந்த பெண்ணின் செல்போனை அவரது சகோதரி சோதனை செய்தபோது அதில் பக்கத்து வீட்டைச் சார்ந்த லாரி டிரைவர் நந்தகுமார்(32) என்பவருடன் அதிகம் பேசி வந்தது தெரிய வந்திருக்கிறது . இதனைத் தொடர்ந்து இளம் பெண்ணின் பெற்றோர் காவல் துறையிடம் புகார் அளித்தனர். காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் இளம் பெண்ணும் நந்தகுமாரும் காதலித்து வந்ததாகவும் அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததில் இளம் பெண் கர்ப்பமானதும் தெரிய வந்திருக்கிறது.
இளம்பெண் கர்ப்பமடைந்ததும் நந்தகுமாரை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் நாம் இருவரும் வேறு வேறு ஜாதி எனக் கூறி நந்தகுமார் திருமணத்திற்கு மறுத்திருக்கிறார். மேலும் அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவரது அடக்கம் செய்த உடலை எடுத்து பிரேத பரிசோதனை செய்ததில் அந்தப் பெண் கர்ப்பமாக இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து லாரி ஓட்டுநர் நந்தகுமார் கைது செய்யப்பட்டார்.