திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காதல் விவகாரம்..பேஸ்புக் காதலியோடு ஏற்பட்ட மனகசப்பால் போலீஸ் எடுத்த விபரீத முடிவு.!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் நவீன்குமார். இவர் விடுமுறைக்காக தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சுண்டமெட்டூர் சென்றுள்ளார்.
இதனையடுத்து இரவு வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தபோது நவீன்குமார் யாரும் எதிர்பாராத விதமாக மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைதொடர்ந்து காலை நவீன்குமாரின் பெற்றோர் அவர் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறித்துடித்துள்ளனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மகுடஞ்சாவடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு விரைந்த வந்த காவல் துறையினர் நவீன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நவீன்குமார் கோவையை சேர்ந்த பெண்ணை பேஸ்புக் மூலம் பேசி பழகி காதலித்து வந்தது தெரியவந்துள்ளது.
மேலும் நவீன்குமார் அவருடைய பேஸ்புக் காதலிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த நவீன்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. இவரது காதலை பற்றி அறியாத பெற்றோருக்கு மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.