மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலித்து திருமணம்... வேறொரு பெண்ணுடன் தொடர்பு... கொடூரமாக மனைவியை கொலை செய்த கொடூரம்...!!
திருமணமான 23 நாட்களில் இளம்பெண்ணை கொலை செய்து விட்டு தற்கொலை என்று நாடகம் ஆடிய கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை காவல்துறையினர்செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் மத்துவராயபுரம் குறிஞ்சி நகரில் வசிக்கும் சஞ்சய் (20) என்ற இளைஞர், கோவை செல்வபுரத்தில் வசிக்கும் ரமணி (20) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த மே மாதம் 6-ஆம் தேதி பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி வேளாங்கண்ணியில் திருமணம் செய்துள்ளனர். அதன் பின்னர், இருவரும் மத்துவராயபுரத்தில் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் 29-ஆம் தேதி மர்மமான முறையில் வீட்டில் ரமணி உயிரிழந்தார். தற்கொலை செய்து கொண்டதாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து காருண்யா நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ரமணியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் ரமணியின் உடலில் காயங்கள் இருப்பதாக ரமணியின் வீட்டார் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் உடற்கூறு ஆய்வில் கழுத்துப் பகுதி இறுக்கப்பட்டதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு ரமணி உயிரிழந்தார் என்று தெரிய வந்தது.
இதனையடுத்து, ரமணியின் கணவர் சஞ்சய், அவரது தாய் பக்ருநிஷா, தந்தை லட்சுமணன் ஆகியோரிடம் டிஎஸ்பி ராஜபாண்டியன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் உண்மை தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ரமனியின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
காவல்துறையினர் இது தொடர்பாக கூறியதாவது, சஞ்சயும், ரமணியும் பேரூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்துள்ளனர். அப்போது இருவரும் காதலித்துள்ளனர். இருவரும் காதலித்தபோதும், மற்றொரு மாணவியுடனும் சஞ்சய் செல்போனில் பேசி வந்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் இது தொடர்ந்துள்ளது.
இது தெரியவர ரமணி கணவரை கண்டித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக கடந்த 29-ஆம் தேதி இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சஞ்சய் ரமணியை அடித்து, துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி உள்ளார். இதில் ரமணி உயிரிழந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சஞ்சய், அவரது தந்தை லட்சுமணன், தாய் பக்ருநிஷா இருவரையும் உதவிக்கு அழைத்துள்ளார். இந்த கொலையை மூன்று பேரும் சேர்ந்து தற்கொலை போல மாற்றியுள்ளனர். வீட்டிலிருந்த மஞ்சளை எடுத்து ரமணியின் சடலத்தை குளிப்பாட்டி துணி மாற்றியுள்ளனர்.
மேலும் சாணிப்பவுடரை கரைத்து ரமணியின் வாயில் ஊற்றி உள்ளனர். திருமணமான 23 நாட்களில் ரமணி கொலை செய்யப்பட்டுள்ளார் உடற்கூராய்வு அறிக்கை மற்றும் தொடர் விசாரணையில் மூவரும் சிக்கியுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.