மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தண்டவாளத்தில் தொடங்கி தண்டவாளத்திலேயே முடிந்த காதல்.. இளம் ஜோடியின் மெய்மறந்த காதலால் இரயில் அடிபட்டு சாவு..!
பணியிடத்தில் மலர்ந்த காதலை இரவு நேரங்களில் இரயில் தண்டவாளத்தில் வளர்ந்து அங்கேயே உயிரைவிட காதல் ஜோடியின் துக்கத்தை விட, பிள்ளைகளின் காதல் எள்ளளவும் பெற்றோருக்கு தெரியாத சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
கடலூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் அலெக்ஸ். இவர் கபடி வீரர் ஆவார். தற்போது சென்னை மறைமலைநகர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதே நிறுவனத்தில் தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்ட 20 வயது ஷெர்லின் என்ற பெண்மணி பணியாற்றி வந்துள்ளார்.
இருவரும் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் தனித்தனியே அறையெடுத்து பக்கத்து வீடுகளில் வசித்து வந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட பழக்கமானது காதலாக மாறவே, இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். மேலும், இரவு நேரங்களில் அங்குள்ள தண்டவாளப்பகுதியில் காதலை வளர்த்து வந்துள்ளனர்.
இவர்களின் காதல் விவகாரம் பெற்றோருக்கும் தெரியாத நிலையில், சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் காதல் ஜோடி வழக்கம்போல தண்டவாளத்திற்கு சென்று மெய்மறந்து காதலில் பேசிக்கொண்டு இருந்துள்ளது. அப்போது, அவ்வழித்தடத்தில் இரண்டு அதிவிரைவு இரயில்கள் இரண்டு தண்டவாளத்தில் வந்துள்ளது.
பனிபொழிவினால் ஓட்டுனராலும் காதல் ஜோடியை அடையாளம் காண இயலாத நிலை இருக்க, தன்னிலை மறந்து அமர்ந்து இருந்த காதல் ஜோடியும் இரயிலின் வருகை குறித்து அறியவில்லை. இதனால் இரயில் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த செங்கல்பட்டு இரயில்வே காவல்துறையினர், இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் மேற்கூறிய தகவல் அம்பலமானது.
இரயில் தண்டவாளத்தில் பகல் நேரத்திலேயே பலரின் அஜாக்கிரதையால் மரணம் நடக்கிறது. இதில், இரவு வேளையில் தண்டவாள காதல் வளர்த்து வந்த காதல் ஜோடி இரயிலில் அடிபட்டு தண்டவாளத்திலேயே மரணித்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.