மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலித்து ஏமாற்றிய காதலன்.. பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற காதலி.!
திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் 24 வயதான இளம் பெண் ஜெயசுதா. இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில் ஈரோடு மாவட்டம் வாணிபுத்தூரை சேர்ந்த வசந்த் என்பவர் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாகவும், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
ஆனால் அந்த புகார் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜெயசுதா காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த போலீசார் ஜேசுதாவை தடுத்து அவர் மீது தண்ணீரை ஊற்றி கோபி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து ஜெயசுதா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.