ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
ஊரடங்கை மீறி புதருக்குள் ஜாலியாக இருந்த காதல் ஜோடி..! ட்ரோன் கேமிரா மூலம் விரட்டிய போலீசார்.! வைரல் காட்சி.
வேகமாக பரவிவரும் கொரோனா காரணமாக நாடு முழுவதும் வரும் மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், அதையும் மீறி சிலர் வெளியே சுற்றுவது, கூட்டமாக விளையாடுவது போன்ற செயலில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதுபோன்று ஊரடங்கை மீறுபவர்களை போலீசார் ட்ரோன் கேமிரா மூலம் துரத்தி பிடிக்கின்றனர். சமீபத்தில் திருப்பூரில் கேரம் போர்ட் விளையாடிய இளைஞர்கள், சேலத்தில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களை போலீசார் ட்ரோன் கேமிரா மூலம் துரத்திய வீடியோ காட்சிகள் வைரலானது.
இந்நிலையில், ஊரடங்கையும் மீறி, காட்டுக்குள் தனிமையில் ஜாலியாக பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடி ஒன்றினை போலீசார் ட்ரோன் கேமிரா மூலம் ஓட ஓட விரட்டியுள்ள காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது. ஊரடங்கியும் மீறி புதருக்குள் இருந்த காதல் ஜோடி ட்ரோன் கேமிராவை பார்த்ததும் முகத்தை மூடி கொண்டு ஓடும் காட்சியை நீங்களே பாருங்கள்.