மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெரும் சோகம்... காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்... இளம் ஜோடி எடுத்த விபரீத முடிவு...
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அண்ணாசாலை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் சுதா நெல்லை பேட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சுதா தனது தாய்மாமன் மகனான சுப்பையாவை காதலித்து வந்துள்ளார்.
ஆனால் சுப்பையாவுக்கு முன்னால் இரண்டு அண்ணன்கள் உள்ள நிலையில் இருவீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுப்பையா பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மயங்கிய நிலையில் கிடந்த சுப்பையாவை மீட்டு நெல்லை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பையா உயிரிழந்தார். அதனையடுத்து சுப்பையாவின் இறுதி சடங்கிற்கு சுதாவின் குடும்பத்தினர் சென்றுள்ளனர்.
அந்த சமயத்தில் வீட்டில் தனிமையில் இருந்த சுதா காதலனின் பிரிவை தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரண்டு அடுத்தடுத்த மரணத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.