தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
'உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம்., மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்' - முதலமைச்சர் உருக்கம்!
நீட் தேர்வு மையத்தில் பயின்று வந்த குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் முதலமைச்ச மு. க. ஸ்டாலின் அவர்கள் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் "மாணவன் ஜெகதீஸ்வரன் அவரது தந்தை செல்வசேகர் ஆகியோரின் மரணமே நீட் பலிபீடத்தின் கடைசி மரணமாக இருக்கட்டும். அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அறிவுமிகு மாணவ கண்மணிகளே தன்னம்பிக்கை கொள்ளுங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம் என மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்", என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில்" மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாத்துள்ளது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையில், ஜெகதீஸ்வரன் தந்தையும் மறுநாளே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனால் ஜெகதீஸ்வரன் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் என்ன சொல்லி ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை. நீட் தேர்வு எனும் பலிப்பிடத்தில் பலியானவர்கள் பட்டியலில் ஜெகதீஸ்வரன் சேர்ந்து விட்டது மிக கொடூரமான நிகழ்வாக இருக்கிறது. ஒரு முறை அல்ல, இரண்டு முறை நீட் விளக்கு மசோதாவை நிறைவேற்றி, மாண்புமிகு ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம்.
முதலில் காலம் கடத்தி திருப்பி அனுப்பினார். இரண்டாவது முறை அனுப்பி வைத்தால் ஒப்புதல் தந்தாக வேண்டும். ஆனால் அதனை அவர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். எங்காவது போய் அந்த மசோதா கிடப்பில் போடப்படும் வேண்டும் என்பதுதான் ஆளுநர் ரவியின் மோசமான எண்ணமாகும்.
ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு கையெழுத்து போடாமல் இருந்த நேரத்தில் அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்களையே சந்தித்தார். இப்போது நாள்தோறும் மாணவர்களை வரவழைத்து கோச்சிங் சென்டரை போல பாடம் நடத்தி வருகிறார்.
அவரிடம் நேருக்கு நேராகவே சேலம் மாணவி ஒருவரின் தந்தை கேள்வி கேட்டபோது நீட் விளக்கு மசோதாவுக்கு நான் கையெழுத்து போட மாட்டேன் என்று ஆளுநர் சொல்லியிருப்பது அவரது அறியாமையை தான் காட்டுகிறது. இந்தச் சட்டத்தை பொருத்தவரையில் அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை ஏதோ அதிகாரம் இருப்பதைப் போன்று அவர் காற்றில் கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறார்.
ஜெகதீஷ் போன்ற எத்தனை உயிர்கள் பலியானாலும் ஆளுநர் ரவிக்கு இதயம் கரையப்போவதில்லை. இன்னும் சில மாதங்களில் நாங்கள் ஏற்படுத்த நினைக்கும் அரசியல் மாற்றம் நடக்கும் போது நீட் தடுப்புச் சுவர் பொலபொலவென உதிர்ந்து விழும். கையெழுத்து போட மாட்டேன் என்றவர்கள் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.