திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்!!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளான இன்று, அவரது கட்சி அலுவலகத்தில் கட்சி தொண்டர்களை சந்திக்கிறார். மேலும், பல்வேறு நல திட்டங்களை வழங்க இருக்கிறார். இந்த நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் "தே.மு.தி.க நிறுவனத் தலைவரும், எனது தோழருமான திரு. விஜயகாந்த் அவர்களுக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
முழு உடல்நலத்துடன் புத்துணர்ச்சியையும் பெற்றுப் பல்லாண்டு நீங்கள் மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ விழைகிறேன்" என்று தனது வாழ்த்தினை தெரிவித்திருந்தார்.