மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Vidoe: காவலரின் லத்தியை பிடுங்கி ஓட ஓட விரட்டி தாக்கிய இளைஞன்.. அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வைரல்.. கயவன் கைது.!
விசாரணைக்கு வருகை தந்த காவல் அதிகாரியிடம் தகராறு செய்து, அவரின் லத்தியை பிடுங்கி ஓடஓட அடித்து விரட்டிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர், எரோடிரோம் பகுதியில் ஒருவர் ரகளை செய்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு கடைநிலை காவல் அதிகாரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அவர், பிரச்சனை செய்தவரிடம் என்ன நடந்தது? என விசாரணை நடத்தியபோது இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரியவருகிறது. இதனால் ஆத்திரமடைந்த நபர், விசாரணைக்கு வந்த அதிகாரியை தாக்கியுள்ளார்.
#MadhyaPradesh: A man thrashed a police constable over a petty issue in Aerodrome area, #Indore on Friday afternoon. After the video went viral on social media, the police arrested the accused. pic.twitter.com/Q00fG0mJxq
— Free Press Journal (@fpjindia) April 9, 2022
மேலும், அவரை கீழே தள்ளி உருண்டு பிரண்டு சண்டையிட்ட நிலையில், காவல் அதிகாரி வைத்திருந்த லத்தியை பிடுங்கி அதிகாரியை ஓடஓட விரட்டி தாக்கியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்த உயர் அதிகாரிகள், உடனடியாக சம்பந்தப்பட்டவனை கைது செய்ய ஆணை பிறப்பித்தனர். இதனையடுத்து, உள்ளூர் காவல் துறையினர் கயவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.