திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மதுரை: மூதாட்டியின் இறுதிச்சடங்குக்கு சுடுகாடு சென்று, சடலமாக திரும்பிய 2 இளைஞர்கள்; மின்னல் தாக்கியதால் நடந்த சோகம்.!
மதுரை மாவட்டத்தில் உள்ள திருபுவனம், கீரனூர் பகுதியை சேர்ந்தவர் அய்யம்மாள் (வயது 60). இவர் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
இவரின் இறுதி ஊர்வலமானானது நேற்று மாலை சுமார் 5 மணியளவில் நடைபெற்ற நிலையில், இடுகாட்டுக்கு செல்லும் வழியில் திடீர் கனமழை ஏற்பட்டது.
இதனால் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களில் சிலர், மரத்தடியில் கனமழைக்கு ஒதுங்கியுள்ளனர். அப்போது, கனமழை காரணமாக மின்னல் தாக்கியுள்ளது.
இந்த சம்பவத்தில் மரத்தடியில் ஒதுங்கிய அக்னிராஜ், செல்வா ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். திருப்பதி, வீரணன் மற்றும் மகேந்திரன் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் மூவரும் மீட்கப்பட்டு திருபுவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மழைக்கு எக்காரணம் கொண்டும் மரத்தடியில் ஒதுங்க கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், மயானம் செல்லும் வழியில் மழைக்கு மரத்தடியில் ஒதுங்கிய இருவர் பலியான சோகம் உள்ளூர் மக்களை மேலும் மீளாத்துயரில் ஆழ்த்தியது.