திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#BigNews: அமைச்சர் பி.டி.ஆரின் கார் மீது செருப்பு வீச்சு.. வைரலாகும் வீடியோ.! பாஜக கொடியுடன் எதிர்ப்புகோஷத்துடன் சம்பவம்.!!
வீரமரணம் அடைந்த இராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்தி வந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜக கொடி வைத்திருந்தவர்கள் செருப்பை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம், டி. புதுப்பட்டியில் வசித்து வந்த இராணுவ வீரர் இலட்சுமணன் காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். அவரின் உடல் தனி விமானம் மூலமாக மதுரைக்கு இன்று கொண்டு வரப்பட்டது.
மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏக்கள், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் தங்களின் அஞ்சலியை செலுத்தினர். அதன்பின், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது காரில் புறப்பட்டு சென்றார்.
விமான நிலையத்தின் வெளியேறும் பகுதியில் பாஜக கொடியுடன் இருந்த சிலர், தீடீரென அமைச்சருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். ஒருவர் சற்றும் எதிர்பாராத நேரத்தில் தனது செருப்பை கழற்றி அமைச்சரின் காரின் மீது வீசினார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு தொற்றிகொள்ளவே, காவல் துறையினர் அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தினர். நிகழ்விடத்தில் இருந்த நபர்களை பிடித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.