மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுமியை பலாத்காரம் செய்ததாக அவதூறு; ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை.!
மதுரை மாவட்டத்தில் உள்ள பைக்காரா, மேட்டுத் தெருவில் வசித்து வருபவர் (வயது 27). இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். திருமணம் முடிந்து மனைவி இருக்கிறார். தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இதனிடையே, ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ், சிறுமி ஒருவரை சில நபர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக ராஜா என்பவர் அவதூறு பரப்பி இருக்கிறார்.
தூக்கிட்டு தற்கொலை
இந்த விஷயம் குறித்து பிரகாஷ் தனது நண்பர்களிடம் வருத்தம் தெரிவித்து, தற்கொலை செய்வதாக வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும், நாகமலை புதுக்கோட்டை பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
வீடியோ வைரல்
இதனிடையே, அவரின் குடும்பத்தினர் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். பிரகாஷின் தற்கொலைக்கு முக்கிய காரணமாக அமைந்த ராஜாவை கைது செய்யுமாறும் கோரிக்கை முன்வைத்தனர். நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, பிரகாஷ் தற்கொலை செய்வதாக கூறிய வீடியோ வெளியாகி பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: பெண்ணிற்கு ஆபாச படம் அனுப்பி 4 லட்ச ரூபாய் பறிப்பு.!! பயிற்சியாளர்கள் மீது பரபரப்பு புகார்.!!
இதையும் படிங்க: காதல் திருமணம் நடந்த 7 ஆண்டுகளில் துயரம்: பலபெண்களுடன் கணவன் நெருக்கம்; மனைவி விபரீதம்..!