திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஐ லவ் யூ மாமா.. கணவன் தற்கொலை செய்த விரக்தியில், காதல் மனைவியும் உயிர் மாய்ப்பு.. அனாதையான 5 மாத பிஞ்சு..!
காதல் திருமணம் செய்த தம்பதியில் கணவர் பெற்றோரின் வீட்டில் திடீரென தற்கொலை செய்துகொள்ள, மனவேதனையில் இருந்த காதலியும் 5 மாத கைக்குழந்தையை மறந்து தற்கொலை செய்துகொண்டார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பெருங்குடி கணேசபுரம் பகுதியை சார்ந்தவர் இசக்கியம்மாள். இவரின் மகள் முத்துமாரி (வயது 21). இவர் பிரசாந்த் என்ற இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு 5 மாத குழந்தை உள்ளது.
பிரசாந்த் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கழுவன்குளத்தில் இருக்கும் பெற்றோரின் வீட்டிற்கு சென்ற நிலையில், கடந்த 11 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும், தங்கைக்கு திருமணம் நடப்பதற்கு முன்னர் பிரசாந்த் திருமணம் செய்தது குறித்து உறவினர்கள் கண்டனம் தெரிவித்ததால், மனவேதனையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை அறிந்த முத்துமாரி பெரும் அதிர்ச்சிக்குள்ளாகவே, ஆசை ஆசையாக காதலித்து கரம்பிடித்த கணவர் தற்கொலை செய்துகொண்டார் என எண்ணி மனவேதனையில் இருந்துள்ளார். கணவர் இறந்த துக்கத்துடன் 5 மாத கைக்குழந்தையோடு தாயின் வீட்டில் இருந்த முத்துமாரி, தனது துயர நிலை குறித்து பலரிடமும் அழுது புலம்பியிருக்கிறார்.
இந்த நிலையில், கணவரை பிரிவை மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியாமல் அவதிப்பட்ட முத்துமாரி, நேற்று இரவு கணவரின் சட்டையை அணிந்துகொண்டு, அவரது புகைப்படத்தை சட்டைப்பையில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டிற்கு எதற்ச்சையாக வந்த உறவினர், முத்துமாரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.
பின்னர், இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அவனியாபுரம் காவல் துறையினர் முத்துமாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், முத்துமாரி தனது கைகளில் "பிரசாந்த் மாமா, ஐ லவ் யூ" என்று எழுதியும் வைத்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக அவனியாபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், திருமணம் முடிந்து ஒன்றரை வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணையும் நடந்து வருகிறது.