மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்த பிளேடு நாகராஜ்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அதிகாரிகள்..!
குற்றவியல் வழக்குகளில் காவல்துறையினர் கைது செய்ய முற்படும்போதெல்லாம் தன்னை தானே பிளேடால் கிழித்துக்கொண்டு தப்பி வந்த மேலவாசல் நாகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாநகரத்தில் உள்ள திடீர்நகர், மேலவாசல் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் நாகராஜ் என்கிற அஜித் பல குற்றவியல் வழக்குகளில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
மேலும், குற்றவியல் வழக்கு சம்பந்தமாக காவல்துறையினர் அவரை கைது செய்ய வரும்போதெல்லாம் தன்னை தானே பிளேடால் காயப்படுத்திக் கொண்டு, அதன் மூலமாக காவல்துறையினர் கைது செய்வதில் இருந்து தப்பித்துக்கொண்டு இருந்துள்ளார்.
இந்த நிலையில், பெரியார் பஸ் நிலையம் வந்து கொண்டிருந்த அவனியாபுரத்தின் MMC காலனியை சேர்ந்த விக்னேஷ் என்பவரின் இருசக்கர வாகனம் மற்றும் கைப்பேசியை, நாகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் வழிமறித்து பறித்துள்ளனர். அத்துடன் விக்னேஷையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனால் காயம் ஏற்பட்டு தப்பித்தால் போதும் என அவர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதுகுறித்து தகவலறிந்த குற்றவியல் பிரிவு தடுப்பு சார்பு ஆய்வாளர் மணிக்குமார் மற்றும் தனிப்படையினர் வெகு நாட்களாக போலீசாரின் கைதிலிருந்து தப்பித்த மேலவாசல் நாகராஜ் எனும்அஜித் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.