திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வேலைக்கு சென்ற கணவன்.. திரும்பி வந்தபோது தாயும், மனைவியும் கிடந்த கோலத்தால் அதிர்ச்சி.!
மதுரையை சேர்ந்த மணிகண்டன் என்ற 42 வயது நபர் வாடகை கார் ஓட்டுனராக இருந்து வருகின்றார். இவருக்கு கம்பம் பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண் அழகு பிரியா என்பவருடன் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. மணிகண்டன் தன் தாய் மயிலம்மாள் மற்றும் மனைவி அழகு பிரியா இவருடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பாக வேலை விஷயமாக மணிகண்டன் வெளியூருக்கு சென்றார்.
வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய போது அங்கே தாயும், மனைவியும் இல்லை. ஆனால் வீட்டில் மணிகண்டனின் அக்கா மகாலட்சுமியின் மகன் குணசீலன் இருந்துள்ளான். அவனுடன் அவனுடைய நண்பன் ரிஷியும் இருந்துள்ளான். அவனிடம் எங்கே அத்தை மற்றும் பாட்டியை காணவில்லை என்று கேட்டதற்கு அவர்கள் இருவரும் கோவிலுக்கு சென்றுள்ளதாக குணசீலன் தெரிவித்துள்ளான். மறுநாள் ஆகியும் இருவரும் வீட்டிற்கு வரவில்லை. வீட்டில் துர்நாற்றம் வீச ஆரம்பித்ததை தொடர்ந்து மணிகண்டன் வீட்டின் பின்பகுதிக்கு சென்று பார்த்துள்ளார்.
அங்கே தாய் மற்றும் மனைவி இருவரும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதற்குள் ரிஷி மற்றும் குணசீலன் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து ரிஷி மற்றும் குணசீலன் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
குணசீலன் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்தப் பெண்ணை திருமணம் செய்ய மயிலம்மாள் மற்றும் அழகு பிரியா இருவரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து திட்டியதாகவும் எனவே ஆத்திரத்தில் அவர்களை கொலை செய்ததாகவும் குணசீலன் தெரிவித்துள்ளான். இதற்கு அவனது நண்பன் ரிசீயும் உடந்தையாக இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.