மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நியோமேக்ஸ் நிதிநிறுவன மோசடி விவகாரம்; திமுக பிரமுகர் நீதிமன்றத்தில் சரண்.!
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்களிடம், நியோமேக்ஸ் நிதி நிறுவனம் பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பாகி தருவதாக கூறி மோசடி செய்தது.
இந்த விவகாரத்தில் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்த மக்கள், பொருளாதார குற்றப்பிரிவுத்துறையில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.17.25 கோடி பணம் முடக்கப்பட்டது.
தற்போது வரை இவ்வ்விவகாரத்தில் தொடர்புடைய 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 92 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மோசடி விவகாரத்தில் கம்பம் பகுதியை சேர்ந்த தெற்கு நகர திமுக செயலாளர் செல்வகுமார், மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.