மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காத்திருந்து காதல் திருமணம் செய்த தங்கையை கடத்திய அண்ணன்?? - மதுரையில் பரபரப்பு சம்பவம்..!
மதுரை மாவட்டத்திலுள்ள மேலப்பொன்னகரம் பாரதியார் தெருவில் வசித்து வருபவர் ஈஸ்வரன் (வயது 40). இவரின் சொந்த ஊர் உத்தரப்பிரதேச மாநிலம் ஆகும். மதுரையில் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார்.
ஈஸ்வரனின் மனைவி சுமதி (வயது 32). இவர் கேரளாவை சேர்ந்தவர். தம்பதிகள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். தற்போது மதுரையில் வசித்து வருகிறார்கள்.
இவர்கள் இருவருக்கும் விஷ்ணு என்ற 12 வயது மகனும், வர்ஷா என்ற 11 வயது மகளும் இருக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த 8 ஆம் தேதியன்று பஜாரில் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கச் சென்ற தாய் மற்றும் மகள் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அவர்களை தேடியலைந்த ஈஸ்வரன், மனைவி மற்றும் மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், சுமதியின் சகோதரர் எனது மனைவி மற்றும் மகளை கடத்தி சென்றதாக தெரியவருகிறது. அவர்களிடமிருந்து இருவரையும் மீட்டு தரவேண்டும் என்று கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.