மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதுரை: மேலவாசல் ரௌடி பேச்சிமுத்து 5 பேர் கும்பலால் கொலை: முன்விரோதத்தில் பயங்கரம்?..!
மதுரை மாவட்டத்தில் உள்ள மேலவாசல் பகுதியில் வசித்து வருபவர் பேச்சிமுத்து (வயது 36). உள்ளூரில் ரவுடி போல வலம் வந்த இவரின் மீது அங்குள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
நேற்று தனது வீட்டின் வாசலில் பேச்சிமுத்து நின்றுகொண்டு இருந்தபோது, ஐந்து பேர் கும்பல் அவரிடம் தகராறு செய்த நிலையில், கத்தி-அரிவாள் உட்பட பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. இந்த சம்பவத்தில் அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், பேச்சிமுத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், பன்றி வளர்க்கும் பிரச்சனை தொடர்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு பாண்டிகணேசன் என்பவர் கொலை வழக்கில், பேச்சிமுத்து சம்பந்தப்பட்டிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட முன்விரதத்தில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கொலையாளிகளுக்கு வலைவீசப்பட்டுள்ளது.