திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
4 முறை தொடர்ந்து அமோக வெற்றி அடைந்த அதிமுக கவுன்சிலர் படுகொலை; மர்ம கும்பல் வெறிச்செயல்.. துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!
மதுரை மாவட்டத்தில் உள்ள பாலமேடு, மாணிக்கம்பட்டி கிராமம், கருப்பங்குளம் கண்மாய் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் தலையில் 2 வெட்டுக்காயத்துடன் சடலமாக இருந்தார். இந்த விஷயம் குறித்து பாலமேடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலையானவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை, கொடைரோடு மாவுத்தன்பட்டி கிராமத்தை சேர்ந்த சந்திரபாண்டியன் (வயது 46) என்பது உறுதியானது.
இவர் அம்மைநாயக்கனூர் பேரூராட்சியில் 4வது முறையாக அதிமுக கவுன்சிலராக வெற்றி அடைந்து இருக்கிறார். நத்தம் லிங்கவாடி பகுதியில் இருக்கும் தனது மகளின் வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் தனது ஊருக்கு சென்றபோது கொலை சம்பவம் நடந்துள்ளது.
இதனால் கொலைக்கான காரணம் என்ன? யார் அவரை கொலை செய்தனர்? என்பதை கண்டறிய தனிப்படை காவல் துறையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். இவரின் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், 6 மாதங்களுக்கு முன் நடந்த ஊர் திருவிழாவில் தகராறு ஏற்பட்டதைத்தொடர்ந்து கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.