#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காதலன் வீட்டில், காதல் ஜோடி விபரீத சம்பவம்... அதிர்ச்சி செயலால் துடிதுடித்துப்போன பெற்றோர்கள்..!
பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மனமுடைந்த பெண்மணி காதலனின் வீட்டிற்கு சென்று காதலருடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான், காசிராயிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் லோகப்பிரபு (வயது 25). அங்குள்ள துவரிமான் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் துர்காதேவி.
இவர்கள் இருவரும் கடத்த 3 வருடமாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இவர்களின் காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவந்து, பெண்ணின் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த காதல் ஜோடி செய்வதறியாது திகைக்கவே, சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியேறிய துர்க்காதேவி காதலனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வைத்து காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த சோழவந்தான் காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.