ரூ.200 கோடி மோசடி.. பேரணியாக சென்றவர்கள் கைது.. மதுரையில் பரபரப்பு.!



Madurai Spero Global Finance Forgery Peoples Protest

திருச்சி நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஸ்பெரோ குளோபல் நிறுவனத்தின் பெயரில், அறம் மக்க சங்கத்தலைவர் ராஜா, அவரின் சகோதரர் ரமேஷ் மற்றும் அழகர்சாமி ஆகியோர் சேர்ந்து, பொதுமக்களிடம் நூதன முறையில் ரூ.200 கோடி மோசடி செய்துள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதனால் பாதிக்கப்பட்ட 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற்று காலையில் மதுரையில் உள்ள ஒத்தக்கடை தேவர் சிலை முன்பு திரண்டு, மதுரை உயர்நீதிமன்ற கிளை பதிவாளரிடம் புகார் கொடுக்க பேரணியாக சென்றுள்ளனர். இந்த பேரணிக்கு காவல் துறையினர் முன் அனுமதி ஏதும் பெறவில்லை.

இதனையடுத்து, காவல் துறையினர் அனைவரையும் கலைந்து செல்ல அறிவுறுத்திய நிலையில், ஆத்திரமடைந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை சுற்றிவளைத்து 200 க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். மீதமுள்ளவர்கள் அங்கிருந்து தப்பித்தால் போதும் என ஓட்டம் பிடித்தனர். 

madurai

இதுதொடர்பாக மக்கள் வைத்திருந்த புகார் மனுவில், "தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டத்தில் ஸ்பெரோ குளோபல் டிரேட் ரியல் எஸ்டேட் நிறுவனம், கடந்த 2 வருடத்தில் ரூ.200 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளது. இந்த மோசடி பணத்தில் பினாமி பெயரில் ரூ.1000 கோடி சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் நேர்மையான காவல் துறை அதிகாரி விசாரணை நடத்தி அழகர் சாமி, ரமேஷ் குமார் மற்றும் இதர குற்றவாளிகளை கைது செய்து, அவர்களிடம் இருக்கும் சொத்தை வைத்து பாதிக்கப்பட்ட மக்களின் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.