#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
லேட்டா புறப்பட்டாலும் லேட்டஸ்டாக வந்து, 44 வருட சாதனையை முறியடித்த வைகை... அந்த ஒருநாள்.. தரமான சம்பவம்.!
மதுரையில் இருந்து சென்னைக்கு பயணம் செய்ய, வைகை அதிவிரைவு இரயில் பகல்நேர விரைவு இரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 1977 ஆம் வருடம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தனது முதல் சேவையை தொடங்கிய வைகை, தினமும் காலை 07.00 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, மதியம் 2.05 க்கு சென்னையை சென்றடையும். மொத்த பயண நேரம் 7 மணிநேரம் 25 நிமிடங்கள் ஆகும்.
அதனைத்தொடர்ந்து, மறுமார்கத்தில் சென்னையில் இருந்து 1.40 மணிக்கு புறப்படும் வைகை, இரவு 09.15 மணிக்கு மதுரையை சென்றடையும். சென்னையில் இருந்து மதுரை செல்ல 7 மணிநேரம் 35 நிமிடங்கள் ஆகிறது. இந்த நிலையில், கடந்த 3 ஆம் தேதி மதுரையில் காலை 07.05 மணிக்கு புறப்படவேண்டிய இரயிலில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் 21 நிமிடங்கள் தாமதமாக காலை 07.26 மணிக்கு புறப்பட்டது.
தாமதமாக இரயில் புறப்பட்டு இருந்தாலும் மதுரை - சென்னை இடையேயான 497 கி.மீ தூரத்தினை 6 மணிநேரம் 40 நிமிடங்களில் கடந்து புதிய சாதனையை செய்தது. இந்த பயண வேகம் என்பது இந்திய இரயில்வே துறையில் வரலாற்று சாதனை என்றும் விபரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
வைகை அதிவிரைவு இரயில் அறிமுகம் செய்யப்பட்ட காலங்களில் மதுரை - சென்னை இடையே பயண நேரம் 7 மணிநேரம் 05 நிமிடங்கள் ஆகும். கடந்த 44 வருடங்கள் கழித்து, இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இரயில்வே துறை அதிகாரியின் ஒத்துழைப்பால் இந்த சாதனை நடந்துள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக ஓட்டுநர் ரவிசங்கர் தெரிவிக்கையில், "கடந்த 2005 ஆம் வருடம் ஆந்திராவில் நான் பணிக்கு சேர்ந்தேன். 2010 ஆம் வருடம் ஈரோட்டில் சரக்கு இரயில் ஓட்டுநராக பணியாற்றினேன். அதனைத்தொடர்ந்து 2017 ஆம் வருடம் மதுரை வைகை எக்ஸ்பிரஸ் வண்டி ஓட்டுநர் ஆகினேன். சம்பவத்தன்று கோளாறு காரணமாக இரயில் புறப்பட 21 நிமிடம் தாமதம் ஆனது. இரயில்வே பணியாளர்களின் ஒத்துழைப்பால் தாமதமாக புறப்பட்டாலும், குறித்த நேரத்திற்கு முன்பே சென்னையை சென்றடைந்தது" என்று தெரிவித்தார்.