மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#JustIN: வைகை ஆற்றில் மூழ்கி சோகம்: 10 வயது சிறுவன் பலி.!
மதுரை மாவட்டத்தில் உள்ள வீரகனூர் பகுதியில் 10 வயது சிறுவன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் இன்று தனது நண்பர்களுடன் அங்குள்ள வைகை ஆற்றுப்பகுதிக்கு சென்று குளித்துக்கொண்டு இருந்ததாக தெரியவருகிறது.
நீருடன் இழுத்து செல்லப்பட்ட சிறுவன்
அச்சமயம் நீர் அதிகம் செல்லும் இடத்திற்கு நடந்து சென்ற சிறுவன், நொடியில் நீருடன் அடித்து செல்லப்பட்டார். இதனால் பதறிப்போன நண்பர்கள் கூக்குரலிட்டு, அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளனர்.
இதையும் படிங்க: பற்பசைக்கு பதிலாக எலிப்பசையில் பல்துலக்கிய பெண்மணி பலி; தூக்க கலக்கத்தில் சோகம்.!!
சிறுவன் பலி
உடனடியாக தெப்பக்குளம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் விரைந்து வந்தனர். எனினும் சிறுவனின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.
பின் காவல் துறையினரால் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. மேற்படி தகவல் சேகரிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: கிரேன் சக்கரம் ஏறி-இறங்கி பயங்கர விபத்து; விசிக மகளிரணி செயலாளர் உடல் நசுங்கி பலி..!