திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மதுரை: 110 வருட பழமையான கட்டிடம் இடிந்து விபத்து.. இரவுநேர ரோந்து காவலர் பரிதாப பலி..!
இரவுநேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் அதிகாரி, பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து பலியான சோகம் நடந்துள்ளது.
மதுரை மாநகரில் உள்ள விளக்குத்தூண் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர்கள் சரவணன் மற்றும் கண்ணன், நேற்று இரவு நேரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது, கீழவீதி பகுதியில் இருசக்கர வாகனம் மூலமாக தேநீர் விற்பனை செய்த இடத்தில் மக்கள் கூட்டமாக இருந்துள்ளனர்.
இதனைக்கண்ட கண்காணிப்பு காவல் அதிகாரிகள், அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர். பின்னர், காவல் அதிகாரிகள் அங்கு நின்றுகொண்டு இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக அங்கிருந்த 110 வருட பழமையான கட்டிடம் இடிந்து அதிகாரிகள் மீது விழுந்துள்ளது.
இடிபாடில் சிக்கிக்கொண்ட காவல் அதிகாரி சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு காவல் அதிகாரி கண்ணன் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விளக்குத்தூண் காவல் துறையினர், கட்டிட உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் துப்பட்டா 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.