திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தாய்மாமா மகனுடன் கள்ளக்காதல்.. கணவனின் கை-கால்களை முடக்க நகையை அடகு வைத்து கூலிப்படை ஏவிய மனைவி.. மதுரையில் பயங்கரம்.!
கணவன் வெளிநாட்டில் இருந்து வந்ததால் கள்ளகாதலனான தாய்மாமா மகனுடன் உல்லாசம் அனுபவிக்காமல் ஏங்கிய மனைவி கணவனை கொலை செய்ய முயற்சித்த பயங்கரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பாலை ஜி.ஆர். நகரில் வசித்து வருபவர் செந்தில் குமார் (வயது 35). இவர் வெளிநாட்டில் என்ஜினியராக பணியாற்றி வருகிறார். இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் வைஷ்ணவி (வயது 24). தம்பதிகள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்து, பெண் குழந்தை இருக்கிறது. செந்தில் குமார் வெளிநாட்டில் பணியாற்றி வருவதால், ஆண்டுக்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
கடந்த மாதம் விடுமுறை எடுத்து சொந்த ஊர் வந்திருந்த செந்தில் குமார், கடந்த 27ம் தேதி இருசக்கர வாகனத்தில் மகளை பள்ளியில் விட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டு இருந்தார். அப்போது, பொன்விழா நகர் அருகில் செந்தில் குமார் வருகையில், தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கும்பல் அவரை இடைமறித்துள்ளது.
அரிவாளாளால் சரமாரியாக செந்தில் குமாரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதனால் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருப்பாலை காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, கொலை முயற்சி தொடர்பாக சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை செய்ய செந்தில் குமார் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
காவல் துறையினர் செந்தில் குமாரின் மனைவி வைஷ்ணவியுடைய செல்போனை வைத்து விசாரணை நடத்துகையில், அவர் குறித்த நபரிடம் பலமணிநேரம் பேசி வந்தது அம்பலமானது. அவர் யார் என்று விசாரணை நடத்துகையில் வைஷ்ணவியின் தாய்மாமா மகன் வெங்கடேசன் (வயது 25) என்பது அம்பலமானது. அதாவது, வைஷ்ணவிக்கும், அவரின் தாய்மாமா மகனான சிவகங்கையை சேர்ந்த எஞ்சினியர் வெங்கடேசனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
செந்தில் குமார் வெளிநாட்டில் இருந்தபோது, கள்ளக்காதல் ஜோடி தாங்கள் ஆசைப்பட்ட நேரத்தில் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளது. அவர் விடுமுறை எடுத்து ஊருக்கு வந்தபின்னர் இருவரும் சந்திக்க இயலாமல் போயுள்ளது. இதனால் கணவரின் கை, கால்களை வெட்டினால் அவரால் வெளியே வர முடியாது. நாம் எதாவது கதை சொல்லி சென்று மாமன் மகனுடன் உல்லாசமாக இருந்து வரலாம் என்ற கொடூர எண்ணம் வைஷ்ணவிக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த தகவலை அவர் வெங்கடேசனிடம் தெரிவித்த நிலையில், அவர் தனது நண்பர்களான கூலிப்படையை சேர்ந்தோரிடம் நகையை அடமானம் வைத்து ரூ.1 இலட்சம் பணம் கொடுத்து கொலை முயற்சி செய்தது அம்பலமானது. இதனையடுத்து, வைஷ்ணவி, கள்ளக்காதலன் வெங்கடேசன் ஆகியோரை கைது செய்த காவல் துறையினர் கூலிப்படை கும்பலுக்கு வலைவீசியுள்ளனர்.