மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் புதையல் இருப்பதாக கூறி... ஒரு லட்சம் வரை ஆட்டையை போட்ட மந்திரவாதி..!
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் புதையல் இருப்பதாக கூறி பணம் பறித்த மந்திரவாதியை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கீரப்பட்டி மலை கிராமத்தில் வசிப்பவர் பழனியம்மாள். இவர் வீட்டில் தனியாக இருந்த போது சேலம், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த செல்வராஜ் என்பவர் குறி சொல்வதாக கூறி பழனியம்மாள் வீட்டில் புதையல் இருப்பதாக கூறியுள்ளார்.
அந்த புதையலை எடுக்கா விட்டால் மூத்த மகளின் உயிருக்கு ஆபத்து என்று கூறியுள்ளார். இதற்காக, வீட்டின் பூஜையறையில் கலசம் வைத்து வழிபட வேண்டும் என்று கூறிய செல்வராஜ், பூஜைக்காக 96 ஆயிரம் ரூபாய் வரை பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, காரணம் கூறி செல்வராஜ் காலம் தாழ்த்தி வந்ததால் சந்தேகமடைந்த பழனியம்மாள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.