சுட்டெரித்த வெயில்.. விவசாய வேலைக்கு சென்று வந்த இளைஞர் சுருண்டு விழுந்து பரிதாப பலி.!



Maharashtra Man Died Heat Wave

பண்ணை வேலைக்கு சென்று வந்த இளைஞர், வெயிலின் தாக்கம் தாங்க இயலாமல் சுருண்டு விழுந்து பலியான சோகம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், காலை முதலாகவே கடுமையான வெயிலால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். அங்குள்ள வடக்கு மகாராஷ்டிராவின் விதர்பா, மராத்வாடா பகுதியில் அதிகபட்ச வெப்ப அலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெயில் நேரங்களில் வீட்டினை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஜல்கா பகுதியை சேர்ந்த இளைஞர் ஜிதேந்திரா (வயது 27). இவர் நேற்று பிற்பகலில் பண்ணை வேலைக்கு சென்று, வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, அவர் வழியிலேயே சுருண்டு விழுந்த நிலையில், இதனைக்கண்ட விவசாயிகள் ஜிதேந்திராவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

maharashtra

மருத்துவமனையில் ஜிதேந்திராவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கவனே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், வெப்பத்தின் அளவு தாங்க இயலாமல் அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஜல்காவ் மாவட்டத்தில் அதிகபட்சமாக 41.8 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவான நிலையில், இது இயல்பை விட 2 டிகிரி செல்ஸியஸ் அதிகம் என்றும் கூறப்படுகிறது.