திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திருச்சி ஹோட்டலில் சடலமாக மீட்கப்பட்ட மலேசியா அரசியல் பிரமுகர்... மர்ம மரணம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை.!
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் மலேசிய நாட்டைச் சார்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கன்ட்ரோல்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அபிராமி ஹோட்டலில் மலேசிய நாட்டைச் சார்ந்த அரசியல் பிரமுகரான முத்துவேல் சின்னா என்பவர் தங்கியிருந்தார். இவர் தனது உறவினர்களின் திருமண நிகழ்ச்சிக்காகவும் திருச்சியில் இருக்கும் கோவில்களை சுற்றி பார்ப்பதற்காகவும் மலேசியாவிலிருந்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இவரது அறை மூடியே இருந்திருக்கிறது அவரது நடமாட்டமும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் இது தொடர்பாக ஹோட்டல் மேனேஜரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஹோட்டல் மேனேஜர் கன்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
உடனடியாக வரைந்து வந்த காவல்துறையினர் மாற்று சாவி மூலம் ஹோட்டல் அறையை திறந்து பார்த்தபோது படுக்கையில் பிணமாக கடந்து இருக்கிறார் முத்துவேல். இது தொடர்பாக அவரது உடலை கைப்பற்றி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் அவர் மலேசிய காங்கிரஸ் கட்சியில் நிர்வாகியாக இருக்கிறார் என்று தெரிய வந்திருக்கிறது. அவர் நோய்வாய் பட்டு இருந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.