திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#EntryFree: மாமல்லபுரம், திருமலை நாயக்கர் மஹாலை பார்க்க இலவச அனுமதி.. மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!
![Mamallapuram Thirumalai Nayakkar mahal Entry Free Today](https://cdn.tamilspark.com/large/large_mammala-55325.png)
உலகளவில் பாரம்பரிய வாரமானது நவம்பர் மாதத்தின் 19ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலும் கொண்டாடப்படுகிறது. இந்த காலங்களில் பாரம்பரிய சின்னங்களை அறிந்துகொள்ளும் வகையில் அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இந்நிலையில், மாமல்லபுரத்தில் இருக்கும் சிற்பங்களை இன்று ஒருநாள் கட்டணமின்றி பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக மாமல்லபுரம் புராதன சின்னம், கடற்கரை கோவில், கலங்கரை விளக்கம் மற்றும் 5 ரதம் செல்ல கட்டணம் அவசியம்.
ஆனால், பாரம்பரிய வாரத்தினையொட்டி இன்று ஒருநாள் மேற்கூறிய அனைத்து புராதன சின்னங்களை பார்வையிட இலவசமாக அனுமதிக்கப்படும். இதனைப்போல, மதுரை திருமலை நாயக்கர் மஹாலை பார்க்க ஒருவாரம் இலவச அனுமதி வழங்கப்டுகிறது என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.