திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மம்தா பானர்ஜிக்கும், சோசலிசத்திற்கும் திருமணம்... வைரலாகும் இளம்ஜோடியின் திருமண அழைப்பிதழ்.!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் மோகன். இவர் தனது கட்சியின் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது மூத்த மகனுக்கு கம்யூனிசம் என்றும், ரஷ்யத் தலைவர் லெனின் மீது கொண்ட பற்று காரணமாக 2-வது மகனுக்கு லெனினிசம் என்றும் மூன்றாவது மகனுக்கு சோசலிசம் என்றும் வித்தியாசமான பெயர்களை வைத்துள்ளார்.
இந்நிலையில் மோசன் தனது மூன்றாவது மகனான சோசலித்துக்கு திருமணம் நிச்சயம் செய்துள்ளார். அங்கு தான் மிகப்பெரிய ஆச்சர்யம். அதாவது மணப்பெண்ணின் குடும்பம் தீவிர காங்கிரஸ் குடும்பம். காங்கிரஸ் கட்சியின் மீது கொண்ட பற்றால் மேற்கு வங்கத்தில் சிங்கபெண் போல் இருக்கும் மம்தா பானர்ஜியின் பெயரை தனது மகளுக்கு சூட்டி அழகு பார்த்துள்ளனர் பழனிசாமி - நீலாம்பாள் தம்பதியினர்.
அதாவது மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை கடுமையாக எதிர்த்து போராடி வருகிறார் மம்தா பானர்ஜி. ஆனால் சேலத்தில் கம்யூனிஸ்ட் குடும்பமான மோகன் குடும்பத்தில் மம்தா பானர்ஜி இணைய உள்ளார். இந்நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.