திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விதவைப் பெண்ணை திருமணம் செய்ய முன்வந்த வாலிபர் அதிரடி கைது! அடுக்கடுக்காக வெளியான அதிர்ச்சி பின்னணி!
சென்னை, மாதவரம் கேகேஆர் கார்டன் பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்விதவை. அவர் மறுமணம் செய்து கொள்வதற்காக வரன் தேடி, திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். இதனை கண்ட ரமேஷ் என்ற 34 வயது வாலிபர் அந்த இளம் பெண்ணை தொடர்பு கொண்டுள்ளார். மேலும் அவர் தான் துறைமுகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும் விதவைபெண்ணை திருமணம் செய்து கொள்வதுதான் எனது லட்சியம் என கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து இருவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
மேலும் விதவை பெண்ணின் பெற்றோர்கள் அவரது திருமணத்திற்கு 25 பவுன் நகையும், ஒரு லட்சம் பணமும் வரதட்சணையாக தருவதாக கூறியுள்ளனர். அதைத்தொடர்ந்து இளம்பெண்ணின் பெற்றோர்கள் திருமணத்திற்கு அழைப்பிதழ் அச்சிட்டு உறவினர்கள் அனைவருக்கும் கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் நிச்சயதார்த்தம் முடிந்து சில நாட்கள் அந்த இளம்பெண்ணின் வீட்டில் தங்கியிருந்த ரமேஷ் தனது நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகு நாட்களாகியும் திரும்பி வரவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ரமேஷ் வரதட்சணைக்காக வீட்டில் வாங்கி வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் பெற்றோர்கள் ரமேஷ் மோசடி செய்துவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் ரமேஷுக்கு ஏற்கனவே பெண்ணுடன் திருமணமாகி இருகுழந்தைகள் இருப்பது தெரியவந்தது.
மேலும் ரமேஷ் தான் ஒரு அரசு அதிகாரி என கூறி அப்பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் வேலைக்கு எதுவும் செல்லாமல் பம்மலில் மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.மேலும் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் வரை மோசடியும் செய்துள்ளார் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் தலைமறைவான ரமேஷை நேற்று கைது செய்தனர் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.