மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காட்டு யானை முன் சேட்டை செய்த நபர்.! வைரலான வீடியோ.! அலேக்காக தட்டி தூக்கிய போலீசார்.!
ஒகேனக்கல் சாலையோரத்தில் நின்ற ஒற்றை யானையை தொந்தரவு செய்து சேட்டை செய்த நபரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கோடைக்காலங்களில் ஒகேனக்கல் வனப்பகுதியில் தண்ணீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது காட்டு யானைகள் சாலையோரங்களில் வருவது வழக்கம். அவ்வாறு அண்மையில் ஒகேனக்கல் காட்டுப்பகுதியில் சாலையோரத்தில் ஒற்றை யானை ஒன்று நின்று கொண்டிருந்துள்ளது.
இந்நிலையில் அப்பகுதி வழியே சென்ற நபர் ஒருவர் வாகனத்தில் இருந்து இறங்கி சென்று யானைக்கு முன் நின்று சீண்டியுள்ளார். அமைதியாக நின்று கொண்டிருந்த யானையை கோபப்படுத்தியுள்ளார். அதன் முன்பு நின்று போஸ் கொடுத்துள்ளார். ஆனால் யானை நல்ல மனநிலையில் இருந்ததால் அவரை தாக்கவில்லை.
This person has been arrested and taken into custody.
— Supriya Sahu IAS (@supriyasahuias) May 12, 2023
Well done DFO Dharmapuri. This should serve as a deterrent to others pic.twitter.com/LhKOQnZls9
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் பலரும் அவரை விமர்சித்து கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் யானையை தொந்தரவு செய்த அந்த நபர் தர்மபுரி மாவட்டம் எட்டிக்குட்டையை சேர்ந்த மீசை முருகேசன் என தெரியவந்துள்ளது. மேலும் அந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.