மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் எனும் பேரில் நடந்த விபரீதம்.. திருமணத்தை மறைத்து 15 வயது சிறுமியிடம் நயவஞ்சகன் செய்த காரியம்.!
15 வயதுடைய சிறுமியை ஆசை வார்த்தை கூறி, திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த நயவஞ்சகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி, விஸ்வநத்தம் பகுதியில் வசித்து வருபவர் ராம்ஆதி. இவர் திருத்தணியில் உள்ள இனிப்புக் கடையில் மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் தனது ஊருக்கு வந்து செல்லும்போதெல்லாம், 15 வயதுடைய அவருடைய உறவுக்கார சிறுமியுடன் பழகி வந்துள்ளார். அத்துடன் தான் சிறுமியை காதலிப்பதாக கூறி, தனது ஆசை வலையில் விழ வைத்துள்ளார்.
இதனை அறியாத சிறுமியும் நயவஞ்சகன் கூறுவதனை உண்மை என நம்பிய நிலையில், ராம்ஆதி நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி சிறுமியை வீட்டைவிட்டு அழைத்துச் சென்று, அருகாமையில் உள்ள ஒரு கோவிலில் சிறுமியை திருமணம் செய்துள்ளார்.
அத்துடன் திருமணம் செய்த கையோடு சிறுமியை திருத்தணிக்கு அழைத்துச் சென்ற ராம்ஆதி, அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில், அவனுக்கு முன்பே திருமணமாகி குழந்தைகள் இருப்பது சிறுமிக்கு தெரியவந்துள்ளது. இருந்தபோதிலும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவரின் நடவடிக்கை பிடிக்காத சிறுமி தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இதனால் கோபமுற்ற ராம்ஆதி சிறுமி குறித்து இணையதளத்தில் தவறான கருத்துக்களை பரப்பி வந்துள்ளார். இந்த விஷயம் சிறுமிக்கு தெரியவர, இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் புகார் அளித்துள்ளார்.
குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர், சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியிடம் விசாரணை நடத்தி புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் ராம்ஆதி மீது போக்சோ மற்றும் குழந்தை திருமணம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.