மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நண்பனின் மனைவியை செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய நபர்.! தட்டி தூக்கிய போலீஸ்.!
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த தர்போக் உசைன் மற்றும் அவருடைய நண்பர் காலித் ஹசன் ஆகிய இரண்டு வாலிபர்களும் சென்னை குரோம்பேட்டை அருகே தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர். ஏற்கனவே திருமணமான தர்போக் உசைன், அதே மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்துகொண்டு குரோம்பேட்டை அழைத்துவந்து அவரது நண்பர் காலித் ஹசன் வீடு அருகே தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் தர்போக் உசைனின் மனைவி குளிப்பதை செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளான் காலித் ஹசன். இதனையடுத்து நண்பனின் மனைவி வீட்டில் தனியாக இருந்தபோது, அந்த வீடியோவை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அந்த சிறுமி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காலித் ஹசனை கைது செய்தனர். மேலும் சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த தர்போக் உசைனையும் கைது செய்தனர்.