#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"கண்ட இடத்துலயும் 'பேட் டச்' செய்றாரு"..சிறுமி போட்டுடைத்த உண்மையால் சிக்கிய நயவஞ்சகன்.!
டியூஷன் எனும் பெயரில் சிறுமியிடம் 'பேட் டச்' செய்த நயவஞ்சகன் போலீசாரால் கைது செய்யப்பட்டான்.
சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சியை அடுத்த சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். 34 வயதான இவர் தனது வீட்டிலேயே டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார். அப்பகுதியை சேர்ந்த மாணவ மற்றும் மாணவிகள் இவரிடம் டியூஷன் படித்து வருகின்றனர். மேலும், விக்னேஷின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் எட்டு வயது சிறுமியும் இவரிடம் டியூஷன் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சிறுமி வழக்கம் போல் டியூஷனுக்கு சென்றபோது, பாடம் சொல்லித்தருவதாக கூறிய நயவஞ்சகன், தகாத முறையில் நடந்து கொண்டதால் சிறுமி பயந்து போய் அழுது கொண்டே வீட்டிற்கு ஓடி வந்துள்ளார். இதனைக் கண்ட பெற்றோர் டியூஷன் சென்று பாடம் படிக்காமல் ஓடிவந்தது ஏன்? என்று விசாரிக்கையில், அதற்கு சிறுமி டியூஷன் டீச்சர் என்னை கண்ட இடத்துலயும் தொட்டு 'பேட் டச்' செய்ராரு எனக் கூறி அழுதுள்ளார்.
இதனைக் கேட்டபின் ஆத்திரமடைந்த பெற்றோர் டியூஷன் டீச்சரான விக்னேஷிடம் சென்று தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனால் சிறுமியின் பெற்றோரிடம், விக்னேஷ் அவதூறாக பேசியதால் உறவினர்கள் நையப்புடைத்தனர். மேலும், இந்த தகவல் அப்பகுதி மக்களுக்கு தெரியவர அனைவரும் திரண்டு விக்னேஷை சரமாரியாக தாக்கி தர்ம அடி கொடுத்துள்ளனர்.
இதையடுத்து அவரை அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர். மேலும், விக்னேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்துள்ளனர். இதன் பின்னர் சேலத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விக்னேஷை சிறையில் அடைத்துள்ளனர்.