மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல செல்போன் கடைக்கு முன், விலையுயர்ந்த புதிய செல்போனை தீயிட்டு கொளுத்திய நபர்.! வெளியான அதிர்ச்சி காரணம்!!
குரோம்பேட்டையில் உள்ள பிரபல தனியார் செல்போன் கடையில் தலைமலை என்பவர் புதிதாக விலை உயர்ந்த செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். வாங்கிய சில நாட்களிலேயே அந்த செல்போனில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த நபர் இதுகுறித்து செல்போன் கடையில் புகார் அளித்துள்ளார்.ஆனால் அவர்கள் இதனை சர்வீஸ் சென்டரில் கொண்டு சென்று கேளுங்கள் என கூறிவிட்டனர். ஆனால் அங்கும் அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இன்று மீண்டும் செல்போன் கடைக்கு வந்த தலைமலை இதுகுறித்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் .ஆனால் அவர்களோ நாங்கள் செல்போன் மட்டும்தான் விற்பனை செய்வோம், உங்க செல்போனில் கோளாறு என்றால் நீங்கள் சர்வீஸ் செண்டரில் போய் கேளுங்க என கூறியுள்ளனர்.
இதில் கோபம் அடைந்த அந்த நபர் கடைக்கு வெளியே வந்து தான் வாங்கிய புதிய செல்போனை தீயிட்டு கொளுத்தியுள்ளார். இந்நிலையில் அங்கு மக்கள்கூட்டம் கூடவே, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.