அரசு அதிகாரி போல் நடித்து கல்லூரி மாணவியை 3வதாக திருமணம் செய்த 40 வயது நபர் கைது.!



Man cheat get 3 marriage in thenkasi

தென்காசி மாவட்டத்தில் உள்ள பட்டாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த காயத்ரி என்ற பெண் கடந்த 2017 ஆம் ஆண்டு ரயிலில் பயணம் செய்த போது, அதே ரயிலில் ராஜபாளையம் அருகே சுந்தர நாச்சியாபுரம் பகுதியை சேர்ந்த 40 வயது அருள்ராயன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதில் அருள்ராயன் தன்னை ஒரு அரசு அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டார்.

இதனையடுத்து இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், காதலாக மாறி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் மதுரையில் திருமணம் செய்து கொண்டு தனியாக வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு அருள் ராயனிடம் காயத்ரி வற்புறுத்தி வந்துள்ளார்.

thenkasi

ஆனால் அருள் ராயன் தொடர்ந்து ஏதாவது காரணம் சொல்லி ஏமாற்றி வந்துள்ளார். இதனையில் நாட்கள் செல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. எனவே காயத்ரியை சமாதானம் செய்து அவரது சொந்த ஊரான பட்டா குறிச்சியில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இதனிடையே காயத்ரி குடும்பத்தாருக்கு அருள் டிராயிங் மீது சந்தேகம் ஏற்படவே, அவரது சொந்த ஊரான சுந்தர நாச்சியாபுரம் சென்று விசாரித்துள்ளனர். அங்கே விசாரித்ததில் அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி விட்டதாக ஊர் மக்கள் கூறியதை கேட்டு குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர் அரசு அதிகாரி இல்லை என்பதும் தெரிய வந்தது.

thenkasi

இதனையடுத்து உடனடியாக அருள் டிராயிங் மீது பண மோசடி உள்ளிட்ட புகார்களை போலீசில் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த புளியங்குடி போலீசார் அருள் ராஜனை கைது செய்தனர்.